Thursday, September 3, 2009

அய்டா(AYDA) - ஜித்தா இப்தார் நிகழ்ச்சி

உரூஸ் அல் பஹர் என்று வர்ணிக்கப் படும் செங்கடல் ஜித்தாவில் AYDA (ADIRAI YOUTH DEVELOPMENT ASSOCIATION) சார்பில் கடந்த புதன்கிழமை இனிய இப்தார் நிகழ்ச்சி நடை பெற்றது.அதிரையைச் சேர்ந்த ஜித்தா வாசிகள் அனேகர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்தற்போது உம்ரா வந்திருக்கும் அதிரை பைத்துல்மால் செயலாளர் வழக்குரைஞர் முனாப் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள், மற்றும் பலர் மக்காவிலிருந்து வருகை தந்து அமர்வினை அலங்கரித்தனர்.
அய்டாவின் சேவை, ABM க்கு - அதன் உறுதுணை, ஆம்புலன்ஸ்- ஒரு கோடி திட்டம், மற்றும் பித்ரா வசூல் பற்றி சிலாகிக்கப்பட்டது. இரவு பசியாறி இனிதே கூட்டம் நிறைவுற்றது.

Friday, May 8, 2009

அதிரைமக்கள் இலவசமாகக் கொடுத்த நிலத்தில்தான் அரசு பொதுமருத்துவமனை, காவல் நிலையம்,பேரூந்து நிலையம்,மின்நிலையம் ஆகிய அரசு அலுவங்களும் செயல்பட்டு வருகின்றன.ஆனால்,நாங்கள் கிரயம் செய்து வாங்கிய நிலத்தில் தொழுவதற்காகக் பள்ளி கட்டுவதற்குத் தடையாகவும் இவர்களே தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள் என்பது தொகுதி எம்.எல்.ஏ ஆக இருக்கும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆகவே விரைவில் கவிழப்போகும் மைனாரிட்டி அரசு தருவதாச் சொல்லும் தொலைக்காட்சிப் பெட்டியைவிட இறைவனைத் தொழுவதற்கு பள்ளிவாசலே எங்களின் உடனடித்தேவை என்பதை உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

அஸ்ஸலமு அழைக்கும் மரண அறிவிப்பு

மரண அறிவித்தல்!


அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த ஜனாப் சாகுல் ஹமீத் (காண்ட்ராக்டர்)அவர்கள் இந்திய நேரம் இரவு 12.45 மணி அளவில் வபாஅத்தாகிவிட்டார்கள்.இன் னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்கள், சகோதரர்கள் சரபுதீன், கமாலுதீன்,தாஜுதீன்,நஜ்முதீன் ஆகியோரின் தந்தையும்,டாக்டர் ஹனீப் அவர்களின் மச்சானும் ஆவார்கள்.

அன்னாரின் மறுமைப்பேறு சிறக்கவும்,எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து,ஜன்னத்துல் பிர்தௌஸ் வழங்கவும் துவா செய்வோமாக

Saturday, May 2, 2009

இந்த உலகில இலிஉ???

பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத்தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ

Sunday, March 8, 2009

ஆடு ஒட்டி வந்த கணவன் மிதும் ஆடுகள் மிதும் லாரி மோதல்







ஆடுகளை ஓட்டி வந்த கணவன், மனைவி கண் முன்னே லாரியில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன. அதிராம்பட்டினம் அருகே நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த பெரும்மச்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர், ராமு. இவருடைய மகன் கண்ணன் (வயது 35). கண்ணனின் மனைவி அழகம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.கண்ணனும், அவருடைய மனைவியும் ஊர் ஊராகச் சென்று ஆடுகளை மேய்ப்பது வழக்கம். இவர்கள் வழக்கம் போல் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆடுகளை மேய்ப்பதற்காக வீட்டை விட்டு புறப்பட்டனர்.இரவு 11.30 மணியளவில் ஆடுகளை ஓட்டிக்கொண்டு அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி கண்ணன் மீதும், ஆடுகள் மீதும் மோதியது. இதில் மனைவி கண் முன்னேயே கண்ணன் பரிதாபமாக செத்தார். 19 ஆடுகளும் துடிதுடித்து செத்தன.விபத்துக்கு காரணமான லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இது குறித்து அழகம்மாள் அதிராம்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Friday, March 6, 2009