Saturday, February 7, 2009

இமாம் சாபி பள்ளி தடம் மாறுகிறதா?

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் இமாம் ஷாஃபி [ரஹ்] மெட்ரிகுலேசன் பள்ளி,அதிரையின் முதல் ஆங்கிலவழி பாடசாலை. மார்க்கப் பின்னணியுடன் கூடிய ஆங்கில வழிக் கல்விக்கூடம் சுற்றுவட்டார நகரங்களிலேயே அதிரையில்தான் தொடங்கப்பட்டது. இப்படியாக முப்பது வருடப்பாரம்பர்யம் கொண்ட இப்பள்ளியின் சமீப வருட அணுகுமுறைகள் பள்ளிக்கு அவப்பெயரை உண்டாக்கிவிடுமோ என நினைக்கத் தோன்றுகிறதுஇரு வருடங்களுக்கு முன்பு பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் ஹாஜாநகர் மாணவனை மாணவியர் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து அவமதித்த ஆசிரியரை மாணவன் திருப்பி அடித்தான். பள்ளி மாணவர்களை அடிக்கும் அரக்கத்தனம் அநாகரிகமாகக் கருதப்படுகிறது. பதின்ம வயதின் (டீனேஜ்) காரணமாக உடலளவிலும் மனதளவிலும் எழும் உடலியல்/உளவியல் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளாது பலர்முன்பு அவமானப் படுத்தப்பட்டதோடு பள்ளியை விட்டும் நீக்கப்பட்டான். வெளிநாட்டில் இருந்த பெற்றோர் மன்னிப்புக் கேட்டும் பொருட்படுத்தாமல் பதினொன்றாம் வகுப்பின் இறுதிக் கட்டத்தில் இருந்த மாணவனை பள்ளியைவிட்டு நீக்கி இமாம் ஷாஃபி பள்ளி நிர்வாகம் தனது பக்குவமின்மையைக் காட்டியது.பத்தாம் வகுப்பு மாணவியொருவர், பார்டர் மதிப்பெண்களில் தேர்ச்சியடடந்த காரணத்தால், மேற்கொண்டு பள்ளியில் படிப்பைத் தொடர முடியாதென்று சொன்னதோடு, காதிர் முஹைதீன் பெண்கள் பள்ளிக்கு மாற்றுதல் வாங்சிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார். மாணவியும் பெற்றோரும் தங்கள் மகள் கடந்த 10-12 வருடங்களாகப் படித்த இமாம் ஷாஃபி பள்ளியிலேயே தொடர அனுமதிக்க வேண்டினர். மிகுந்த கோரிக்கைக்குப் பின்னர், பள்ளி நிர்வாகம் மாணவியை அதே பள்ளியில் படிக்க அனுமதித்தனர்.இங்கு விமர்சிக்கப்பட வேண்டிய விசயம் என்னவென்றால், இமாம் ஷாஃபி பள்ளியின் எதிர்காலத் திட்டங்களில் ஒன்றாக நமதூரில் பெண்கள் கல்லூரி தொடங்குவதும் உள்ளது. தங்கள் பள்ளியில் படித்த மாணவிக்கு மேற்படிப்பு படிக்க அனுமதிக்காவிடில் எப்படி கல்லூரிக்கு மாணவியர் கிடைப்பார்கள் என உணரவில்லை. மேலும், 10-12 வருடங்கள் பள்ளியில் படித்த மாணவியின் குறைவான மதிப்பெண்ணுக்கு குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களும்தான் என்பதைக் கவனத்தில் கொள்ள மறந்தார்கள்.சமீபத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் ஒருவரை தவறுதலாக வெற்று குறுஞ்செய்தி (EMPTY SMS) அனுப்பிய காரணத்திற்காக ஆயுவுக்கூடத்திற்கு அழைத்து அடித்துத் துன்புறுத்திய ஆசிரியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட மாணவனை 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்ததைக் கண்டித்து நமதூர் மாணவர்கள் அமைப்பினர் கொதித்தெழுந்தனர். மாணவன் பக்கம் குற்றமில்லை என்பது நிரூபனமான பின்பும்கூட, பாதிக்கப்பட்ட மாணவனை பதினைந்து நாட்கள் சஸ்பெண்ட் செய்து தண்டித்தது எந்த வகையான நீதி என்று தெரியவில்லை. ஆசிரியரின் அநாகரிகத்தைக் கண்டு கொள்ளாது தண்டிக்கப்பட்ட மாணவன், நீதிமன்றம் சென்று நியாயம் கேட்ட பிறகும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மாணவனைத் தாக்கிய ஆசிரியர்களில் ஒருவர் தாமாகவே ராஜினாமா செய்துள்ளார். மற்றொருவர் உதவித் தலைமையாசிரியர் நிலையில் இருப்பதால் நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டு வழக்கு வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது.நல்லெண்ணம் கொண்டவர்களால் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இமாம் ஷாஃபி பள்ளியின் சமீபகால அணுகு முறைகள் நெறி தவறுவதற்கு யார் காரணம்?பள்ளிகளில் கட்டுப்பாட்டைப் போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் நிதானம் இழப்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதா? பாதிக்கப்பட்டவர்கள் படிப்பைப் பாதியில் நிறுத்தினால் நஷ்டத்திற்கு யார் பொறுப்பு?தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வி பயின்றால் எதிர்காலத்தில் நல்ல நிலை அடைவார்கள் என்ற நம்பிக்கையில், இமாம் ஷாஃபி பள்ளியின்மீது நம்பிக்கை வைத்த பெற்றோர்களுக்குப் பள்ளி நிர்வாகம் என்ன வகையான உத்தரவாதத்தைக் கொடுக்கப்போகிறார்கள்?இக்கால கட்டத்தில் மார்க்கக்கல்வியும் உலகக் கல்வியும் ஒருங்கே பெற்ற பள்ளிகள் சொற்பளவே உள்ளன. சிறுபான்மையினர் நிறைந்துள்ள அதிரை போன்ற சிற்றூர்களில் அரசாங்கம் அல்லது வர்த்தக ரீதியில் யாரும் இது போல் கல்விச்சேவை செய்ய முன் வரமாட்டார்கள். 30 வருடப்பாரம்பர்யம், பெற்றோரின் நன்மதிப்பு இவற்றை ஒருசில ஆசிரியர்களின் நடவடிக்கை காரணமாக இமாம் ஷாஃபி இழந்து விடக்கூடாது என்ற ஆதங்கத்திற்குப் பள்ளி நிர்வாகம் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
இஸ்லாம் பார்வையில்"இரத்த பந்தம்"
Posted: 03 Feb 2009 07:25 PM CST
அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்'' என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், ""நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்: ""தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்) நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.'' (ஷு"ஃ புல் ஈமான் அல் பைஹகீ)நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை.'' (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)அல்லாஹ் அருளியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ""நானே ரஹ்மான். நான் "ரஹிமை' (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.'' (ஸுனன் அபூதாவூத்)ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)ஆம்ரு இப்னு ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்) ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

No comments:

Post a Comment