Friday, February 20, 2009

ஆபத்தான அஜினோமோட்டோ

டாக்டர் கங்காசாம்பார், மீன் குழம்பு, ஃபிரைடு ரைஸ் என்று எல்லா உணவுகளின் ருசியையும், வாசனையையும் அதிகரிக்கப் பயன்படும் ஒரு டேஸ்ட் மேக்கர் அஜினமோட்டோ.. இன்று ஹோட்டல் உணவு மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் தன் ராஜ்ஜியத்தை விரித்திருக்கிறது அஜினமோட்டோ..தொடர்ந்து அஜினமோட்டோ எடுத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இந்த அஜினமோட்டோவால் உடம்புக்கு நமக்கு அப்படி என்னதான் பிரச்னை?அதென்ன அஜினமோட்டோ?உணவில் வாசனையை அதிகப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் ஒருவித வேதிப்பொருள் தான் இந்த அஜினமோட்டோ (Ajinomoto). உங்களுக்கொன்று தெரியுமா? அந்தக் காலத்திலெல்லாம், žனர்களும் ஜப்பானியர்களும் உணவில் வாசனையை அதிகப்படுத்திக் கொள்ள ஒரு வகையான கடல்பாசியை உபயோகித்தார்கள். இந்தக் கடல் பாசியில் தான் வாசனையை மேம்படுத்த உதவும் மோனோஸோடியம் குளுட்டோமேட் அதாவது M.S.G. என்ற வேதிப்பொருள் இருப்பது தெரியவந்தது. சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அஜினமோட்டோ(Ajinomoto) என்ற கம்பெனி இதை வியாபார ரீதியாக தயாரிக்க ஆரம்பித்தது. நாளடைவில் அஜினமோட்டோ என்ற பெயரே இந்த வேதிப்பொருளுக்கும் நிலைத்து விட்டது

No comments:

Post a Comment