Sunday, February 8, 2009

தத்துவப் பேராசிரியர், மாணவர்கள்

ஒரு தத்துவப் பேராசிரியர், மாணவர்கள் முன் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு காலி ஜார் எடுத்து பின் அதில் இரண்டு இஞ்ச் அளவுக்கு கற்களை நிரப்பினார். பின் மாணவர்களை நோக்கி, இந்தக் குடுவையில் ஏதும் நிறைந்திருக்கிறதா? என்று கேட்டார். மாணவர்கள் ஆம் என்றனர். பின் கொஞ்சம் கூழாங்கற்களை எடுத்து அதே குடுவையில் போட்டுக் குலுக்கினார். கூழாங்கற்கள் குடுவையில் ஏற்கனவே இருந்த சாதா கற்களுக்கு இடையில் புகுந்து நிறைந்தன. மறுபடியும் மாணவர்களைப் பார்த்து குடுவையில் ஏதும் நிறைந்திருக்கிறதா?! என்றார். மாணவர்களும் ஆம் என்றனர். பின் பேராசிரியர் கொஞ்சம் மணல் எடுத்து குடுவையில் போட்டுக் கலக்கினார். அது கற்கள், கூழாங்கற்களுக்கு இடையில் நிறைந்து மேலும் சிறு இடைவெளி கூட இல்லாமல் ஆக்கியது. மறுபடியும் மாணவர்களிடம் இந்தக் குடுவை நிறைந்திருக்கிறதா என்று கேட்டார். மாணவர்களும் ஆமாம் என்றனர்.
பேராசிரியர் பிறகு சொல்ல ஆரம்பித்தார்.
இந்தக் குடுவையை உங்கள் வாழ்க்கையாக நினைத்துக் கொள்ளுங்கள். திடமான கற்கள்தான் உங்கள் வாழ்வின் முக்கியமான குடும்பம், துணை, உங்கள் ஆரோக்கியம், உங்கள் குழந்தைகள். கூடவே இருக்கிற கூழாங்கற்கள் அடுத்து உங்கள் வாழ்வில் முக்கியமாக வருகிற வேலை, வீடு, உங்கள் கார் போன்றவை. உங்கள் வாழ்வில் மற்றவை எல்லாம் மணல்தான். ஸ்மால் ஸ்டஃப்!
நீங்கள் உங்கள் குடுவையை முதலில் மணலால் நிரப்பிவிட்டீர்கள் என்றால் பிறகு அதில் திடமான கற்களுக்கும், வழவழப்பான கூழாங்கற்களுக்கும் இடம் இருக்காது.
Take care of the rocks first!

No comments:

Post a Comment